/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
32 வழக்கில் தொடர்புடையவர் கைதுக்கு உறவினர்கள் எதிர்ப்பு
/
32 வழக்கில் தொடர்புடையவர் கைதுக்கு உறவினர்கள் எதிர்ப்பு
32 வழக்கில் தொடர்புடையவர் கைதுக்கு உறவினர்கள் எதிர்ப்பு
32 வழக்கில் தொடர்புடையவர் கைதுக்கு உறவினர்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 03, 2024 01:25 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், பேரூரை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் மீது நான்கு கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் உள்ளன. 2018ம் ஆண்டு நாங்குநேரி பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, நாங்குநேரி கோர்ட்டில் பிடிவாரன்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கூட்டி சென்றனர். கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரூர் சாலையில் உறவினர்கள் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை தலைமையிலான போலீசார், பொதுமக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் இரு புறங்களிலும் கயிறுகளை கட்டியும், கற்களால் சாலையை அடைத்தும் வைத்ததால், ஸ்ரீவைகுண்டம்- - துாத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சட்ட விரோதமாக மறியலில் ஈடுபட கூடாது என, டி.எஸ்.பி., மாயவன் எச்சரித்தார். மேலும், மறியலில் ஈடுபட்டோரை கைது செய்ய டி.எஸ்.பி., மாயவன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

