/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
65 பவுன் நகை ரூ.1.5 லட்சம் கொள்ளை
/
65 பவுன் நகை ரூ.1.5 லட்சம் கொள்ளை
ADDED : மே 04, 2024 01:55 AM

தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், ரூ. 1.5 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரியை சேர்ந்தவர் பெருமாள்சாமி. அபுதாபியில் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சுந்தரி 40. இரண்டு குழந்தைகளுடன் வில்லிசேரி வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு சுந்தரி வீட்டை பூட்டி விட்டு ஒரு அறையில் குழந்தைகளுடன் தூங்கினார்.
நேற்று காலை பார்த்தபோது மர்மநபர்களால் வீட்டின் பின்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு வீட்டின் மற்றொரு சுவரில் பதிக்கப்பட்டிருந்த லாக்கரில் இருந்த 65 பவுன் தங்கநகைகள், ரூ. 1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கயத்தாறு போலீசார் விசாரிக்கின்றனர்.