/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
9,000 லிட்டர் பயோ- டீசல் துாத்துக்குடியில் பறிமுதல்
/
9,000 லிட்டர் பயோ- டீசல் துாத்துக்குடியில் பறிமுதல்
9,000 லிட்டர் பயோ- டீசல் துாத்துக்குடியில் பறிமுதல்
9,000 லிட்டர் பயோ- டீசல் துாத்துக்குடியில் பறிமுதல்
ADDED : ஆக 21, 2024 01:21 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளில் பயன்படுத்த, மானிய விலையில் அரசு டீசல் வழங்கி வருகிறது.
இந்நிலையில், கூடுதல் டீசல் தேவைப்படுவோர் வெளியே உள்ள பங்க்களில் வாங்குவது வழக்கம். சிலர், விலை அதிகம் காரணமாக, டீசலுடன் பயோ - டீசலை கலந்து மோட்டார்களில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துாத்துக்குடி தென்பாகம் மற்றும் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை சோதனையிட்டனர்.
அதில், 48 பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சோதனையிட்ட போது, 48 பேரல்களிலும், 9,000 லிட்டர் பயோ - டீசல் இருந்தது தெரிந்தது.
எவ்வித ஆவணமும் இன்றி கடத்தி வரப்பட்ட பயோ - டீசல் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பாவூர்சத்திரத்தை சேர்ந்த சங்கர், 22, கடையத்தைச் சேர்ந்த தவமணி, 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
விசைப்படகு உரிமையாளர்களிடம் வேலை பார்க்கும் மீனவர்கள், 2,000 லிட்டர் டீசலுக்கு உரிமையாளரிடம் பணம் பெற்றால், 1,000 லிட்டர் டீசலையும், 1,000 லிட்டர் பயோ - டீசலையும் படகில் பயன்படுத்துகின்றனர். பயோ - டீசல், 1 லிட்டர் 45 ரூபாய்க்கு கிடைக்கிறது. மீதி பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
டீசலுடன், பயோ - டீசலை கலந்து பயன்படுத்துவதால் இன்ஜின் விரைவில் பழுதடைந்து விடும் என தெரிந்தும் அவ்வாறு செய்கின்றனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் தயாரிக்கப்படும் பயோ -டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

