/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சீர்காட்சி அருகே வீட்டில் கிடைத்த ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை
/
சீர்காட்சி அருகே வீட்டில் கிடைத்த ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை
சீர்காட்சி அருகே வீட்டில் கிடைத்த ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை
சீர்காட்சி அருகே வீட்டில் கிடைத்த ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை
ADDED : மே 30, 2024 01:48 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே சீர்காட்சி பகுதியைச் சேர்ந்தவர் வேல்குமார், உடன்குடியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் செடி வைப்பதற்காக குழி தோண்டினார். அப்போது குழியில், நீண்ட காலத்திற்கு முன் புதைக்கப்பட்ட நடராஜர் சுவாமி சிலை கிடைத்தது. அந்த நடராஜர் சிலை, 10 கிலோ எடை உள்ளது.
சிலை குறித்து தாசில்தார் பாலசுந்தரம் கூறியதாவது:
அந்த சிலை லேசாக சேதம் அடைந்திருந்தது. அது வெண்கல சிலையா, ஐம்பொன் சிலையா என தெரியவில்லை. திருநெல்வேலியில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த சிலை ஒப்படைக்கப்படும். சிலையை சோதனை செய்த பிறகே கூடுதல் விபரம் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.