/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தனியார் பைனான்ஸ் நிறுவனம் ரூ.27,670 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

ADDED : ஆக 24, 2024 05:34 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி அனல்மின்நகரைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்று டி.வி., வாங்கியுள்ளார்.
தவணை முறையில் வங்கி காசோலை மூலம் பணத்தை திருப்பி செலுத்தி வந்துள்ளார். கடைசி தவணை தொகையை தனியார் பைனான்ஸ் நிறுவனம் வேண்டுமென்றே வசூல் செய்யாமல் கால தாமதப்படுத்தியுள்ளது.
வங்கிக் கணக்கில் கால தாமத கட்டணம் என்ற பெயரில் 7,670 ரூபாயை இழப்பீடு செய்துள்ளனர். மீனாட்சி விசாரித்தபோது, நேரில் ஒரு விளக்கமும், வங்கியில் ஒரு விளக்கமும், கடன் கணக்கு பட்டியலில் ஒரு விளக்கமும் என அந்நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர்.
கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட கால தாமத கட்டணத்தை திரும்பத் தரக் கேட்டு உரிய ஆவணங்களுடன் மீனாட்சி விண்ணப்பித்துள்ள போதிலும், தனியார் பைனான்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது.
இதையடுத்து, துாத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர்,நமச்சிவாயம் ஆகியோர், கால தாமத கட்டணம் என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட 7,670 ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை 10,000 ரூபாய், வழக்கு செலவுத் தொகை 10,000 ரூபாய் என மொத்தம் 27,670 ரூபாயை இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.