/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வரலாறு காணாத மழை பெய்தும் துாத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம்
/
வரலாறு காணாத மழை பெய்தும் துாத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம்
வரலாறு காணாத மழை பெய்தும் துாத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம்
வரலாறு காணாத மழை பெய்தும் துாத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம்
ADDED : மே 03, 2024 09:40 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில், டிசம்பர் மாதம் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை பெய்தது. ஊரெங்கும் தண்ணீர் சூழ்ந்து காட்சியளித்தது. ஆனால், தற்போது, மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிநீர் சரியாக கிடைக்காத நிலை இருக்கிறது.
குறிப்பாக, விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எப்போதும் வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, மிளகுநத்தம், ஆதனுார், அய்யர்பட்டி, கண்ணக்கட்டை, தளவாய்புரம், குமரட்டையாபுரம், சோழபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.
இந்த கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும், எப்போதும் வென்றான் நீர்த்தேக்க அணை முறையாக துார் வாரப்படாமல் காட்சியளிக்கிறது. அணை முழுதும் கரிசல் மண் திட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. கடந்தாண்டு பல கோடி ரூபாய் மதிப்பில் அணை துார்வார நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், முறையாக அணையை துார் வாராமல் கரைகள் மட்டும் சரி செய்ததாக கூறப்படுகிறது.
வரலாறு காணாத மழை பெய்தும், நீர்த்தேக்க அணையை சரிவர துார் வாராததால், அனைத்து நீரும் கடலில் வீணாக கலந்தது.
இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிநீர் பிரசனை ஏற்பட்டுள்ளது.