/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
விலை வீழ்ச்சியால் கால்நடைக்கு தீவனமாகும் முருங்கைக்காய்
/
விலை வீழ்ச்சியால் கால்நடைக்கு தீவனமாகும் முருங்கைக்காய்
விலை வீழ்ச்சியால் கால்நடைக்கு தீவனமாகும் முருங்கைக்காய்
விலை வீழ்ச்சியால் கால்நடைக்கு தீவனமாகும் முருங்கைக்காய்
ADDED : ஆக 12, 2024 10:51 PM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, தட்டார்மடம் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் ஏக்கர் கணக்கில், சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை சாகுபடி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் செம்மண் இருப்பதால், இங்கு விளையும் முருங்கைக்கு தனி மவுசு உண்டு.
தற்போது, அதிக விளைச்சல் மற்றும் ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாததால், முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது.
கடந்த மாதம் முருங்கைக்காய் 1 கிலோ 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
விலை அதிகம் என்ற போதிலும் வியாபாரிகள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். இந்நிலையில், தற்போது முருங்கைக்காய் கிலோ 8 - 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வியாபாரிகள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மரத்தில் இருந்து காய்களை பறிக்காமல் இருக்க முடியாது என்பதால், முருங்கை காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'முருங்கைக்காய் பறிப்பு கூலி வழங்குவதற்கு கூட விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது' என்றனர்.

