/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போதை மாத்திரைகள் விற்பனை ஜோர் கல்லுாரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது
/
போதை மாத்திரைகள் விற்பனை ஜோர் கல்லுாரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது
போதை மாத்திரைகள் விற்பனை ஜோர் கல்லுாரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது
போதை மாத்திரைகள் விற்பனை ஜோர் கல்லுாரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது
ADDED : பிப் 22, 2025 02:35 AM
துாத்துக்குடி:கல்லுாரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சாலையில் உள்ள தனியார் கல்லுாரியில் சில மாணவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் பி.காம் மூன்றாமாண்டு மாணவர் ரூபக் ராஜேஷ், 19, முதலாமாண்டு மாணவர் சிம்சன்ராஜ், 18 ஆகியோரை சோதனை செய்தனர்.
அவர்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள் இருந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அக்கல்லுாரியின் முன்னாள் மாணவரான வெங்கடேஷ், 23, பொன்ராஜ், 45, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கஞ்சா, 50 போதை மாத்திரைகள், 4 மொபைல்போன்கள், 3,200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
கைதான பொன்ராஜ், டாக்டர்களின் கையொப்பம் இல்லாமல் போலியான மருந்து சீட்டை வைத்து பல மெடிக்கல்களில் போதை மாத்திரைகளை வாங்கி அந்த தனியார் கல்லுாரி மாணவர்கள் சிலருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நெட்வொர்க்கில் அந்த கல்லுாரி மாணவர்கள் சிலரும் ஈடுபட்டு வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஜெசி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். சிலரை தேடி வருகிறோம்.இவ்வாறு கூறினர்.