/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி மாணவியருடன் ஒரே அறையில் தங்கிய மாணவன் லாட்ஜ் உரிமையாளருடன் நான்கு பேர் கைது

ADDED : ஆக 22, 2024 02:25 AM
நாகர்கோவில்:துாத்துக்குடியில் ஐ.டி.ஐ., படிக்கும், 17 வயது மாணவியர் இருவர், அதே வயதுடைய மாணவன் மற்றும் ஒரு இளைஞர் என நான்கு பேர், கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று, ஒரே அறையில் தங்கியிருந்த அந்த நான்கு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், மாணவியரும், மாணவரும் துாத்துக்குடியில் ஐ.டி.ஐ., படிப்பதாகவும், மற்றொரு இளைஞர் சந்தீஷ்குமார், 22, சட்டக்கல்லுாரி மாணவர் என்பதும் தெரிந்தது. நான்கு பேரின் பெற்றோருக்கும் தகவல் அனுப்பப்பட்டு, வரவழைக்கப்பட்டனர்.
அந்த நான்கு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியரிடம் ஆசை வார்த்தை கூறி, கன்னியாகுமரி அழைத்து வந்தது தெரிந்தது. மேலும், வயது நிரம்பிய ஒருவரது ஆதார் கார்டு தேவைப்பட்டதால், சட்டக் கல்லுாரி மாணவர் குமாரையும் அழைத்து வந்ததாக அந்த சிறுமியர் கூறினர்.
இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி அறை வழங்கியதாக லாட்ஜ் மேனேஜர் சிவன், 54, உரிமையாளர் பால்ராஜ், 62, சட்டக் கல்லுாரி மாணவர் சந்தீஷ்குமார் மற்றும் அந்த 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஐ.டி.ஐ., மாணவர் நாங்குநேரி சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும், குமார் மற்றும் சிவன் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பால்ராஜுக்கு வயது முதிர்வை காரணம் காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
மாணவியர் இருவருக்கும் நேற்று, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.