ADDED : செப் 01, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தெற்கு பன்னம்பாறையை சேர்ந்தவர் சுடலை 52. சொந்தமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தார்.
ஆழ்வார்திருநகரி அருகே தேமன்குளத்தில் விவசாய நிலத்தையொட்டி ஆட்டுக் கிடை அமைத்து அங்கே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவில் கிடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஆடுகள் பக்கத்து நிலத்தில் மேய்ந்தது தொடர்பாக சுடலைக்கும் நில உரிமையாளருக்கும் இடையே தகராறு நடந்ததாக தெரிகிறது.
அப்பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரான என ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரித்தனர்.