/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கனிமொழி விளக்கம்
/
ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கனிமொழி விளக்கம்
ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கனிமொழி விளக்கம்
ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கனிமொழி விளக்கம்
ADDED : ஆக 25, 2024 01:48 AM

துாத்துக்குடி;துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் மியூசியத்தை பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 6ல் கீழவல்லநாடு ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருடன் எம்.பி., கனிமொழி கலந்துரையாடினார்.
அப்போது மாணவர் ஒருவர் ஆதிச்சநல்லுார் சைட் மியூசியத்தை பார்வையிட அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, துாத்துக்குடி அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியர்கள் 130 பேருடன் எம்.பி., கனிமொழி பஸ்சில் பயணித்து ஆதிச்சநல்லுார் தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார். மாணவ, மாணவியருடன் அவர் பஸ் இருக்கையில் அமர்ந்து, சகஜமாக பழகினார்.
தொடர்ந்து, ஆதிச்சநல்லுாரில் நடந்த அகழாய்வு குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளித்தனர்.
சைட் மியூசியத்தை பார்வையிட்ட மாணவ, மாணவியர் அகழாய்வு குறித்து பல விசயங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
தொடர்ந்து, கீழடிக்கும் மாணவ, மாணவியரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கனிமொழி தெரிவித்தார். துாத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தாசில்தார் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.