/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 11, 2024 08:17 PM
துாத்துக்குடி:திருச்செந்துார் அருகேயுள்ள கீழ நாலுமூலைகிணற்றில் பூரண புஷ்கலா தேவி சமேத குன்றுமேலய்யன் மெய்கண்ட மூர்த்தி கோவில் உள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான குன்று மேல் சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.
காலை சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து, காலை 9 :1 5 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானதளத்திற்கு எடுத்துவரப்பட்டு விமான கும்ப கலசங்களுக்கு அபிஷேகம் நடக்கிறது. பின்னர், குன்றுமேலய்யன் சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.