/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மழை வௌ்ள சீரமைப்பு பணி துாத்துக்குடியில் அமைச்சர் ஆய்வு
/
மழை வௌ்ள சீரமைப்பு பணி துாத்துக்குடியில் அமைச்சர் ஆய்வு
மழை வௌ்ள சீரமைப்பு பணி துாத்துக்குடியில் அமைச்சர் ஆய்வு
மழை வௌ்ள சீரமைப்பு பணி துாத்துக்குடியில் அமைச்சர் ஆய்வு
ADDED : செப் 05, 2024 08:43 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வௌ்ள சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது;
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தின் போது நெடுஞ்சாலைத்துறை பாலங்கள், ரோடுகள் சேதமடைந்தன. மொத்தம் 163 சாலை, பாலங்கள் சேதமடைந்தது. இதனை தற்காலிகமாக சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் ரூ.140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தற்காலிக சீரமைக்கும் பணிகள் முடிவடைந்தது. நிரந்தர சீரமைப்புக்கு மொத்தம் ௮௩ பணிகள் எடுக்கப்பட்டது. இதற்கு ரூ.௧௧௯ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் 37 பணிகள் முடிவடைந்தது, மீதமுள்ள 47 பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடியும்.
வெள்ளத்தில் கடும் சேதம் அடைந்த ஏரல் பாலம் சீரமைக்கு பணி செப்டம்பர் மாதத்தில் முடிவடையும். துாத்துக்குடி வி.வி.டி.. மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது, சாலைகளை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்துதல் ஆகிவற்றிக்கான அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் எடுப்பதற்கு வருவாய்த்துறை நிதியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நாம் தமிழர் வளாகத்தை சேர்ந்தவர் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் ௩ம் கேட் ரயில்வே பாலத்தில் சர்வீஸ் ரோடு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் பின்னர் மேம்பாலம், சர்வீஸ் ரோடுஅமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கும்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டிலேயே அந்த திட்டம் செயல்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிலம் எடுக்காமல் டெண்டர் விட்டு எந்த பணியும் செய்யாமல் விட்டு விட்டனர். இதனால் தான் இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், கலெக்டர் இளம்பகவத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.