/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாதிரி ஓட்டுப்பதிவை அழிக்க மறந்த அதிகாரிகள் * துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் சர்ச்சை

ADDED : மே 30, 2024 10:30 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் ஏப்., 19ல் நடந்த ஓட்டுப்பதிவின்போது, 66.88 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மொத்த ஓட்டுகள் 14,58,430. இதில், 9,75,468 ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்க உள்ள நிலையில், மாவட்டத்தில் இரண்டு ஓட்டுச் சாவடிகளில் மாதிரி ஓட்டுப்பதிவை அதிகாரிகள் அழிக்க மறந்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர்களின் முகவர்கள் கூறியதாவது:
துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் ஏப்., 19ல் நடந்த ஓட்டுப்பதிவின்போது, திருச்செந்துார் சட்டசபை தொகுதியில் 149வது ஓட்டுச் சாவடி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் 28வது ஓட்டுச்சாவடி ஆகிய இரண்டு இடங்களிலும் மாதிரி ஓட்டுப் பதிவை அழிக்காமல் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, அந்த இரண்டு ஓட்டுச்சாவடியில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கடைசியில் எண்ணப்படும். 17 சி படிவத்தில் குறிப்பிட்டுள்ள விபரம் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.