/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தாய்,- மகள் கொலையில் போலீஸ் பயன்படுத்தும் டிரோன்
/
தாய்,- மகள் கொலையில் போலீஸ் பயன்படுத்தும் டிரோன்
ADDED : மார் 06, 2025 01:45 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மேல நம்பிctபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சீதாலட்சுமி, 75, அவரது மகள் ராமஜெயந்தி, 47, ஆகியோர் கடந்த 3ம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
எட்டையபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இரட்டை கொலை தொடர்பாக மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், 28, தாப்பாத்தியை சேர்ந்த முகேஷ் கண்ணன், 25, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், 31, என்பவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் தற்போது, அங்குள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தென் மண்டல ஐ.ஜி ., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 9 தனிப்படை போலீசார் காட்டுப்பகுதியில் 6 டிரோன்களை பறக்கவிட்டு, முனீஸ்வரை தீவிரமாக தேடி வருகின்றனர். அயன் வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை , ரகுராமபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.