/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பலாத்காரத்தில் மூதாட்டி கொலை வாலிபருக்கு வாழ் நாள் சிறை
/
பலாத்காரத்தில் மூதாட்டி கொலை வாலிபருக்கு வாழ் நாள் சிறை
பலாத்காரத்தில் மூதாட்டி கொலை வாலிபருக்கு வாழ் நாள் சிறை
பலாத்காரத்தில் மூதாட்டி கொலை வாலிபருக்கு வாழ் நாள் சிறை
ADDED : ஆக 07, 2024 12:57 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கீழஈரால் புதுக்காலனியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பாப்பா, 65, என்பவர், 2020ல் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எட்டையபுரம் போலீசார் விசாரித்தனர். பாப்பா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அவர் அணிந்திருந்த கம்மல் திருடப்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பாக, சாயல்குடியைச் சேர்ந்த கர்மமுனீஸ்வரன், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், துாத்துக்குடி மகளிர் கோர்ட் நீதிபதி மாதவ ராமானுஜம் வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட கர்மமுனீஸ்வரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து, அவரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற போலீசார், மத்திய சிறையில் அடைத்தனர்.