/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கையில் அபராதம்
/
துாத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கையில் அபராதம்
ADDED : செப் 04, 2024 01:39 AM
துாத்துக்குடி : துாத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற, 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர்களது இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு படகில் சென்ற 12 பேருக்கு தலா, 1.5 கோடி ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மீதமுள்ள 10 பேரையும் வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி அயோனா விமலரத்ன உத்தரவிட்டார். ஒரு மீனவருக்கு 1.5 கோடி ரூபாய், அந்நாட்டு கரன்சியில் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.