/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வைகாசி விசாகம், பவுர்ணமி திருச்செந்துார் ஸ்தம்பித்தது
/
வைகாசி விசாகம், பவுர்ணமி திருச்செந்துார் ஸ்தம்பித்தது
வைகாசி விசாகம், பவுர்ணமி திருச்செந்துார் ஸ்தம்பித்தது
வைகாசி விசாகம், பவுர்ணமி திருச்செந்துார் ஸ்தம்பித்தது
ADDED : மே 25, 2024 02:15 AM

துாத்துக்குடி:-வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நகரில் ஐந்து இடங்களில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாகத்தை தொடர்ந்து பவுர்ணமியை முன்னிட்டு இரண்டாவது நாளாக நேற்று முன் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர். கடற்கரையில் இரவு முழுதும் தங்கியிருந்து மறுநாள் அதிகாலையில் கடலிலும் நாழிக்கிணற்றிலும் புனித நீராடினர். பின், நீண்ட வரிசையில் ஐந்து மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகம், பவுர்ணமி என அடுத்தடுத்து விஷேச தினங்களால் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய ஊர்களில் இருந்து அதிக வாகனங்கள் வந்திருந்தன. கோவில் வளாகத்தில் கட்டட பணிகள் நடப்பதால் அங்கு போதிய அளவில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை.
இதனால், நகரின் வெளியே தற்காலிக வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பத்து மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இரவு பகலாக வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப அடிப்படை தேவையான கழிவறை மற்றும் குளியலறை இல்லாததால், பக்தர்கள் அவதிப்பட்டனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பெரிய திருவிழாக்களை மிஞ்சும் வகையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு படை எடுப்பதால், நகரமே ஸ்தம்பித்து விடுகிறது.

