/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் ஏலச்சீட்டு நடத்தி 500 பேரிடம் மோசடி கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் முற்றுகை

ADDED : ஆக 08, 2024 12:35 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவர், அன்னை சிட்ஸ் என்ற பெயரில் ஆசிரியர்காலனியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் அவரிடம் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி இருந்தனர்.
இந்நிலையில், அலுவலகத்தை பூட்டிய அருண்குமார் திடீரென தலைமறைவானார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அருண்குமாரின் பேச்சை நம்பி அவரது சீட்டு நிறுவனத்தில் பணத்தை செலுத்தி இருந்தோம். தற்போது, அவர் சிறையில் உள்ளதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் அன்றாட கூலி வேலை பார்த்து வருகிறோம்.
கிடைத்த பணத்தில் சிறிது சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீட்டு போட்டிருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் ஏமாற்றப்பட்டு பணம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இந்த விஷயத்தில் தலையிட்டு அருன்குமாரிடமிருந்து உடனடியாக எங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.