/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
இலங்கைக்கு கடத்தவிருந்த 3,000 கிலோ பீடி இலை
/
இலங்கைக்கு கடத்தவிருந்த 3,000 கிலோ பீடி இலை
ADDED : ஜன 25, 2025 02:07 AM

துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 3,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
துாத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசார், துாத்துக்குடி, இனிகோநகர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அங்கிருந்த பைபர் படகில், இலங்கைக்கு கடத்துவதற்காக, 43 மூட்டைகளில் இருந்த, 1,200 கிலோ பீடி இலையை பறிமுதல் செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ சரக்கு வாகனம், பைபர் படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
அதே போல, ஆத்துார் அருகே உள்ள ஜெயராமச்சந்திராபுரம் தாமிரபரணி ஆற்று படுகையில் இருந்து, படகில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டைகளில் இருந்த 1,800 கிலோ பீடி இலைகளையும், கியூ பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்.