/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சண்முக விலாச மண்டபத்தில் திடீரென திரண்ட 500 பேர்
/
சண்முக விலாச மண்டபத்தில் திடீரென திரண்ட 500 பேர்
ADDED : ஆக 17, 2025 02:26 AM

திருச்செந்துார்:தொடர் விடுமுறை மற்றும் ஆடி கிருத்திகை என்பதால், திருச்செந்துார் கோவிலில் நேற்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை 1 மணி முதலே, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை சுமார் 6:30 மணிக்கு கோவில் முன் வாசலான சண்முக விலாச மண்டபத்தின் முன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
புதிதாக போடப்பட்ட இரும்பு கதவை திறந்த பாதுகாவலர்கள், சிலரை மட்டும் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். இதை பார்த்ததும் பாதுகாவலர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆத்திரமடைந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் திடீரென சண்முக விலாச மண்டபத்தின் முன் போடப்பட்டிருந்த இரும்பு கதவை வலுக்கட்டாயமாக உடைத்து மண்டபத்திற்குள் சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த போலீசார், நீண்ட நேரம் போராடி பக்தர்களை வெளியேற்றினர்.