/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி
/
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி
ADDED : ஆக 16, 2025 02:10 AM

துாத்துக்குடி:55 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த தம்பதி மரணத்திலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே போலையர்புரத்தை சேர்ந்தவர் பச்சப்பு தர்மராஜ், 83. இவரது மனைவி தங்க புஷ்பம், 77. கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்ததுள்ளது. 2 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே சென்று விட்டனர்.
போலையர்புரத்தில் உள்ள வீட்டில் பச்சப்பு தர்மராஜும், தங்கபுஷ்பமும் தனியே வசித்து வந்தனர். சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தங்கபுஷ்பம் நேற்று அதிகாலை 5:30 மணியளவில் மரணம் அடைந்தார்.
அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகளை உறவினர்கள் மேற்கொண்டு வந்த நிலையில், பச்சப்பு தர்மராஜின் உடல் நலம் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கேயே காலை 7:30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
55 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த தம்பதி ஒரே நாளில் அடுத்தடுத்து மரண மடைந்திருப்பது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.