/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மது அருந்திய போது தகராறு; லாரி டிரைவர் குத்திக்கொலை
/
மது அருந்திய போது தகராறு; லாரி டிரைவர் குத்திக்கொலை
மது அருந்திய போது தகராறு; லாரி டிரைவர் குத்திக்கொலை
மது அருந்திய போது தகராறு; லாரி டிரைவர் குத்திக்கொலை
ADDED : நவ 10, 2024 11:09 PM

துாத்துக்குடி ; துாத்துக்குடி, ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் மாரிமுத்து, 32. இவரும், மேல அழகாபுரியை சேர்ந்த கட்டட தொழிலாளி மகாராஜா, 36, என்பவரும் நண்பர்கள். கடந்த 8ம் தேதி புதிய வீடு கட்டும் பணியை மகாராஜா துவங்கியுள்ளார்.
அன்றைய தினம் இரவு மாரிமுத்துவும், மகாராஜாவும் வீட்டின் ஒரு பகுதியில் மது அருந்தினர்.
அதைப்பார்த்த மகாராஜா மனைவி வள்ளிநாயகி கோபித்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை அவர் வீடு திரும்பியபோது, மகாராஜா அங்கு இல்லை.
ரத்தம் படிந்த நிலையில் அவரது உடைகள் அங்கு கிடந்தன. பயந்துபோன வள்ளிநாயகி, தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மகாராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகம்அடைந்தனர்.
இதற்கிடையே, மகாராஜாவுடன் மது அருந்திய மாரிமுத்து, ஜாகீர் உசேன் நகர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டின் அருகே நேற்று காலை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தாளமுத்துநகர் போலீசார் அவரது உடலை மீட்டனர்.
தலைமறைவாக இருந்த மகாராஜா முறப்பநாடு பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மது அருந்திய போது, வள்ளிநாயகி பற்றி தவறாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.