/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பள்ளி மாணவியரிடம் அத்துமீறல்; கல்லுாரி மாணவரிடம் விசாரணை
/
பள்ளி மாணவியரிடம் அத்துமீறல்; கல்லுாரி மாணவரிடம் விசாரணை
பள்ளி மாணவியரிடம் அத்துமீறல்; கல்லுாரி மாணவரிடம் விசாரணை
பள்ளி மாணவியரிடம் அத்துமீறல்; கல்லுாரி மாணவரிடம் விசாரணை
ADDED : நவ 13, 2024 11:22 PM
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உடன்குடியில், சல்மா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், 41. இவர், மாணவியர் சிலருக்கு மது கொடுத்து, அத்துமீறியதாக எழுந்த புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கீழ்தரமான செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்ட, பள்ளி முதல்வர் ஸ்வீட்டி என்ற பெண் மற்றும் பள்ளியின் செயலர் செய்யது அகமது ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமின் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்குடன் கல்லுாரி மாணவர் ஒருவரும், மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. ரகசிய இடத்தில் வைத்து, அஜய் என்ற அந்த மாணவரை போலீசார் விசாரிக்கின்றனர்.