/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
காரில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
/
காரில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
ADDED : மே 20, 2025 04:24 AM

துாத்துக்குடி : திருநெல்வேலி, வி.எம்.சத்திரத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான, 'மாருதி ஆல்டோ' காரை, அவரது சகோதரர் பிரதாப், 33, நேற்று அதிகாலை வாங்கி சென்றார். திருநெல்வேலி -- துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
காரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி முற்றிலுமாக எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருந்தது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரதாப் வைத்திருந்த இரு மொபைல்போன்கள் ஆப் செய்யப்பட்டுள்ளது. சடலம் யார் என கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
பிரதாப் தொடர்பான டி.என்.ஏ., மாதிரிகளை சேகரித்த போலீசார், சென்னைக்கு அனுப்பி உள்ளனர். முறப்பநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.