/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாடு குறுக்கே வந்ததால் விபத்து ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி
/
மாடு குறுக்கே வந்ததால் விபத்து ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி
மாடு குறுக்கே வந்ததால் விபத்து ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி
மாடு குறுக்கே வந்ததால் விபத்து ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி
ADDED : ஜன 18, 2025 12:17 AM
துாத்துக்குடி:திருச்செந்துார் அருகே குமாரபுரம் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் வனசிவகுமார், 14; தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த நவீன்ராஜ், 24, என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில், திசையன்விளை சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
உடன்குடி,- தைக்காவூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நவீன்ராஜ், 'பிரேக்' பிடித்தார்.
ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வனசிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த நவீன்ராஜ், உடன்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.