/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தொடர்ந்து விரிசல் ஏற்படும் பாலம் அடிக்கடி பஞ்சராகும் வாகனங்கள்
/
தொடர்ந்து விரிசல் ஏற்படும் பாலம் அடிக்கடி பஞ்சராகும் வாகனங்கள்
தொடர்ந்து விரிசல் ஏற்படும் பாலம் அடிக்கடி பஞ்சராகும் வாகனங்கள்
தொடர்ந்து விரிசல் ஏற்படும் பாலம் அடிக்கடி பஞ்சராகும் வாகனங்கள்
ADDED : அக் 28, 2024 01:35 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி --- மதுரை இடையே மாநில நெடுஞ்சாலையாக இருந்த, 149 கி.மீ., சாலை, 2007ல் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையாக மாறியது. மதுரையில் இருந்து துாத்துக்குடி துறைமுகம், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வருவோர் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மதுரை, சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பெருநகரங்களுக்கு கனரக வாகனங்கள் அதிகம் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில், எட்டையபுரம் அருகே முத்துலாபுரம் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விரிசல் காரணமாக வாகனங்கள் பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:
முத்துலாபுரம் வைப்பாற்றின் குறுக்கை கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் குறுக்கே, 10 மீட்டருக்கு ஒரு இரும்பு ராடு பொருத்தப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஒவ்வொரு தடுப்புற்கிற்கும் இடையில் உள்ள இரும்பு ராடுகளுக்கும், கான்கிரீட்டுக்கும் அவ்வப்போது விரிசல் ஏற்பட்டு வருகிறது.
தற்காலிகமாக அதை சரி செய்தாலும் மீண்டும் கான்கிரீட் உடைப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரும் பாலத்தின் முடிவில் இரும்பு ராடு விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட்டில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கூர்மையாகவும் உள்ளன.
இவை, அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து, பஞ்சராகி விபத்துக்குள்ளாகுகின்றன. இவற்றை நிரந்தர தீர்வாக சரி செய்வது கிடையாது. இதனால் தினமும் வாகனங்கள் பஞ்சராகி சாலையோரம் காட்சி பொருளாக நிற்கின்றன. 24 மணி நேரமும் வாகனங்கள் இயங்கக்கூடிய இச்சாலையின் முக்கியத்துவம் கருதி, விரிசலை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.