/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
/
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
ADDED : ஏப் 16, 2025 08:50 PM

துாத்துக்குடி:தாமிரபரணி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் விஜய், 21. தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியல் இறுதியாண்டு படித்து வந்தார். விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் தாமிரபரணி ஆற்றில் ஏரல் அருகே வாழவல்லான் தடுப்பணையில் குளிக்க சென்றனர்.
நீச்சல் தெரியாத விஜய், ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்க முடியாமல் தவித்த நண்பர்கள் ஏரல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சில மணி நேர தேடுதலுக்கு பின் விஜய் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதிக்கு யாரும் செல்லக் கூடாது என போலீசார் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதையும் மீறி சிலர் சென்று குளிப்பதால் விபத்தில் சிக்குவதாக போலீசார் கூறினர்.