/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நடத்தை விதி மீறிய எஸ்.ஐ., பெண் போலீஸ் சஸ்பெண்ட்
/
நடத்தை விதி மீறிய எஸ்.ஐ., பெண் போலீஸ் சஸ்பெண்ட்
ADDED : செப் 07, 2025 01:18 AM
துாத்துக்குடி:டிராபிக் எஸ்.ஐ., மற்றும் பெண் போலீஸ் ஆகிய இருவர், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் எஸ்.ஐ.,யாக வேலை பார்த்தவர் செல்வகுமார், 36. அதே பிரிவில் இந்திராகாந்தி, 32, என்ற பெண், காவலராக வேலைபார்த்தார். நெருங்கி பழகிய இருவரும், ஆக., 17ல் நடுரோட்டில் சண்டையிட்டனர்.
இதனால், எஸ்.ஐ., செல்வகுமார் திருச்செந்துாருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, செல்வகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இந்திராகாந்தி புகார் அளித்தார்.
இதையடுத்து, எஸ்.ஐ., செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹாசி மணி நேற்று உத்தரவிட்டார். இதேபோல, நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, பெண் காவலர் இந்திராகாந்தியையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.