/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பகுதி நேர வேலை என ரூ.21 லட்சம் மோசடி
/
பகுதி நேர வேலை என ரூ.21 லட்சம் மோசடி
ADDED : செப் 22, 2024 03:35 AM
துாத்துக்குடி:பகுதி நேரவேலை என லிங்க் அனுப்பி, 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3.23 லட்சம் ரூபாயை துாத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
துாத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரின் மொபைல் போனுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு என 'லிங்க்' வந்துள்ளது. அதை கிளிக் செய்து அதில் கூறப்பட்டுள்ள இணையதளத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சிறிய தொகையை அந்த இளைஞர் லாபமாக பெற்றுள்ளார்.
அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய இளைஞர் பல தவணைகளாக அவர்கள் கூறிய 16 வங்கிக் கணக்குகளுக்கு 21 லட்சத்து 7,000 ரூபாய் அனுப்பியுள்ளார்.
முதலீடு செய்த பணத்துக்கு லாபம் வரவில்லை. அந்த நபர்களிடம் இளைஞர் தொடர்பு கொண்டபோது, கூடுதலாக 15 லட்சம் செலுத்தினால் மொத்தமாக லாபம் பெறலாம் என கூறியுள்ளனர்.
மோசடி என்பதை உணர்ந்த இளைஞர், தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் செய்தார். தனிப்படையினர் தொழில்நுட்ப ரீதியாக விசாரித்தனர்.
விளாத்திகுளம் இளைஞர் அனுப்பிய மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த 28 லட்சத்து 22,000 மோசடி பணத்தை முடக்கினர்.
நீதிமன்ற உத்தரவுப்படி முடக்கிய பணத்தில் 3 லட்சத்து 23,000 ரூபாயை பாதிக்கப்பட்ட விளாத்திகுளம் இளைஞரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினர்.
மீதி பணத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட மர்மநபர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் ைபர் கிரைம் போலீசார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.