/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்
/
பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்
பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்
பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்
ADDED : செப் 06, 2025 02:33 AM
துாத்துக்குடி:பைக் மீது கார் மோதிய விபத்தில் மனைவி கண்ணெதிரே தொழிலாளி உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், தெற்கு குருவிகுளம் புதுாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா பாலசிங், 34, தன் மனைவி முத்துச்செல்வி, 30, என்பவருடன் விருதுநகர் மாவட்டம், சாத்துாருக்கு பைக்கில் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முப்பன்பட்டி விலக்கு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே, மனைவி கண்ணெதிரே ராஜா பாலசிங் உயிரிழந்தார்.
காயமடைந்த முத்துச்செல்வியை போலீசார் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காரை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 43, என்பவரிடம் கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.