/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஐ.என்.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
/
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஐ.என்.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஐ.என்.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஐ.என்.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 21, 2024 01:51 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி, 'சிப்காட்' பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இதற்கு எதிராக, 2018ல் மக்கள் போராட்டம் நடத்தினர்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர். இதையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட ஒரு தரப்பினரும், ஆலையை மீண்டும் திறக்கக் கோரி மற்றொரு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்., தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., சார்பில் நேற்று துாத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐ.என்.டி.யு.சி., மாநில துணைத் தலைவர் கதிர்வேல் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கதிர்வேல் கூறியதாவது:
துாத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கடுமையான சமூக பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், நேரடியாக 1,500 பேர் மற்றும் அதை சார்ந்த 40,000 தொழிலாளர்கள், சார்பு தொழில்களில் பணிபுரிந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் நினைத்தால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக செயல்பட வைக்க முடியும். ஆலை செயல்பட துவங்கினால், 3,000 லாரிகள் இயக்கப்படும். தொழில் போட்டியால், ஸ்டெர்லைட் ஆலையை முடக்குவது நியாயமல்ல.
ஆலை இயங்கினால், மத்திய, மாநில அரசுகளுக்கு, ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நாட்டின் தாமிர தேவையில், 40 சதவீதம் பூர்த்தி அடையும். ஆலையை திறந்தால், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 40,000 குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.