sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 40 சதவீதம் விலை உயர்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்

/

 40 சதவீதம் விலை உயர்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்

 40 சதவீதம் விலை உயர்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்

 40 சதவீதம் விலை உயர்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்

1


ADDED : ஜன 29, 2026 06:08 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் நல சங்க தலைவர் கார்த்திக், செயலர் கண்ணன் ஆகியோர் நேற்று கூறியதாவது:

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடலை மிட்டாய் தயாரிப்பின் மூலப்பொருளான நிலக்கடலையின் விலை, கடுமையாக உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் வரை, 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை, 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 14,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதை சமாளிக்கும் வகையில், கடலை மிட்டாய் விலையை, 40 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். தற்போது, ஒரு கிலோ கடலை மிட்டாய், 160 ரூபாய் முதல், 180 ரூபாய் என மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 40 சதவீத உயர்வால் இனி, 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

சில்லறைக்கு ஒரு கிலோ கடலை மிட்டாய், 200 ரூபாய் முதல், 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், 40 சதவீதம் உயர்வால், ஒரு கிலோ, 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு, நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us