/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை
/
சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை
ADDED : ஏப் 07, 2025 01:27 AM
எட்டையபுரம்: சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்ததாக போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு, வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே வடக்கு முத்தலாபுரத்தை சேர்ந்தவர் அருண்ராஜ், 31. அப்பகுதியை சேர்ந்த, 6 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்றதாக, 2019ல் கைது செய்யப்பட்டார்.
போக்சோ மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அருண்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், அருண்ராஜுக்கு, கொலை மற்றும் வன்கொடுமை குற்றங்களுக்காக தனித்தனியே ஆயுள் தண்டனையும், தலா, 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
போக்சோ குற்றத்திற்காக, எஞ்சிய வாழ்நாள் முழுதும் கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அருண்ராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.