/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கல் குவாரியால் விவசாயம் பாதிப்பு: மக்கள் போராட்டம்
/
கல் குவாரியால் விவசாயம் பாதிப்பு: மக்கள் போராட்டம்
கல் குவாரியால் விவசாயம் பாதிப்பு: மக்கள் போராட்டம்
கல் குவாரியால் விவசாயம் பாதிப்பு: மக்கள் போராட்டம்
ADDED : டிச 05, 2024 04:16 AM

தெய்வச்செயல்புரம்: துாத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே ஆலந்தா கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. அங்கு, தி.மு.க., பிரமுகர் காசிராஜன் என்பவர், 200 ஏக்கர் நிலத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். அவர், அரசு விதிமுறைகளை மீறி முறையாக அனுமதி பெறாமல் கல்குவாரி நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த கல்குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தி, ஆலந்தா கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உடனடியாக கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அங்குள்ள மாடசாமி கோவில் வளாகத்தில் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தா மற்றும் சவாலாப்பேரி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கருப்புக்கொடி ஏந்தியபடி கல்குவாரியை மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள், நா.த.க., - த.வெ.க., தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு என பல அமைப்பினர் பங்கேற்றனர்.