/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
/
போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
ADDED : மார் 20, 2025 02:48 AM

துாத்துக்குடி:போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது தீர்ப்பு வழங்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 26, என்பவர் 2021ல் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
எட்டையபுரம் போலீசார் அவர் மீது குழந்தை கடத்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷுக்கு குழந்தை கடத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டுகளும், போக்சோ குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, 7000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
இதையடுத்து, சந்தோஷ் பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.