/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போக்சோ வழக்கில் கைதானவர்களுக்கு நெஞ்சு வலி
/
போக்சோ வழக்கில் கைதானவர்களுக்கு நெஞ்சு வலி
ADDED : நவ 12, 2024 11:27 PM

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உடன்குடியில் செயல்படும் சல்மா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான பொன் சிங், 41, என்பவர், மாணவியர் சிலருக்கு மது கொடுத்து, அத்துமீறியதாக புகார் எழுந்தது.
அவரை கைது செய்யவும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, பள்ளியின் முன், பெற்றோர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கோவையில் தலைமறைவாக இருந்த பொன் சிங், போக்சோ சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, பள்ளி முதல்வர் சார்லஸ் சுவீட்லி, 40, பள்ளியின் செயலர் செய்யது அகமது, 51, ஆகியோரையும் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.
அப்போது, செய்யது அகமதுவும், சார்லஸ் சுவீட்லியும் தங்களுக்கு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் கூறினர். போலீசார், திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் இருவரையும் சேர்த்தனர். இருவரது உடல் நிலையும் சரியான பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர்

