/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாணவியிடம் 'சில்மிஷம்' பாதிரியார் மீது 'போக்சோ'
/
மாணவியிடம் 'சில்மிஷம்' பாதிரியார் மீது 'போக்சோ'
ADDED : நவ 25, 2025 06:14 AM
துாத்துக்குடி: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் மீது, போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள ஒத்தசை மாதா சர்ச்சில், பாதிரியாராக பன்னீர்செல்வம், 43, என்பவர் இருக்கிறார். அங்கு வரும் சிறுவர் - சிறுமியருக்கு கீ போர்டு, பாடல், நடனம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அதற்காக தனி ஆசிரியை பணியில் இருந்து வந்தாலும், பன்னீர்செல்வமும் சில நேரங்களில் பயிற்சி அளிப்பது வழக்கம். இந்நிலையில், சர்ச்சுக்கு வந்த 17 வயது மாணவி ஒருவரிடம், பன்னீர்செல்வம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி, தன் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கூறினார். இருவரும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பன்னீர்செல்வம் மீது போக்சோவில் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

