/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி பதிவாளர் ஆபீசில் ரெய்டு: ரூ.1.60 லட்சம் பறிமுதல்
/
துாத்துக்குடி பதிவாளர் ஆபீசில் ரெய்டு: ரூ.1.60 லட்சம் பறிமுதல்
துாத்துக்குடி பதிவாளர் ஆபீசில் ரெய்டு: ரூ.1.60 லட்சம் பறிமுதல்
துாத்துக்குடி பதிவாளர் ஆபீசில் ரெய்டு: ரூ.1.60 லட்சம் பறிமுதல்
ADDED : நவ 29, 2024 02:05 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது, ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் கீழூர் சார் -- பதிவாளர் அலுவலகம் உள்ளது.
அங்கு, பத்திரப் பதிவிற்கு வருவோரிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை திடீரென அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
போலீசார் உள்ளே சென்றதும், அனைவரது மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆப் செய்யப்பட்டன. அலுவலகத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
சார் - பதிவாளர் பொறுப்பு வகித்து வரும் ஆரோக்கியராஜ் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், பத்திர எழுத்தர் கோமதி உட்பட பலரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அலுவலக ஊழியர் ஒருவரிடம் இருந்து, கணக்கில் வராத 27,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகளுக்கு பணம் வாங்கி கொடுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட ஜோசப் என்பவரிடம் இருந்து, 1.33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.