/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
இலங்கைக்கு கடத்த இருந்த 160 கிலோ கடல் அட்டை மீட்பு
/
இலங்கைக்கு கடத்த இருந்த 160 கிலோ கடல் அட்டை மீட்பு
இலங்கைக்கு கடத்த இருந்த 160 கிலோ கடல் அட்டை மீட்பு
இலங்கைக்கு கடத்த இருந்த 160 கிலோ கடல் அட்டை மீட்பு
ADDED : நவ 06, 2024 01:57 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி, திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள், பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை அப்பகுதியில் சோதனையிட்டனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த, 'மஹிந்திரா ஜெனியோ' வேனில் இருந்த 160 கிலோ கடல் அட்டைகள், 37 பண்டல்களில் இருந்த 1,500 கிலோ பீடி இலைகள், வேன் மற்றும் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த டூ - வீலரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 85 லட்சம் ரூபாய்.
கடல் அட்டைகள் மற்றும் பீடி இலை பண்டல்கள், படகில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. கடல் அட்டைகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.