தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மாணவரை தாக்கிய ஆசிரியை மீது வழக்கு

மாணவரை தாக்கிய ஆசிரியை மீது வழக்கு

மாணவரை தாக்கிய ஆசிரியை மீது வழக்கு


UPDATED : நவ 22, 2026 08:51 PM

ADDED : நவ 22, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 08:51 PM ADDED : நவ 22, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே, பத்தாம் வகுப்பு மாணவரை தாக்கிய ஆசிரியை ஜேசுரதி, 46, மீது வழக்கு பதியப்பட்டது.

தாதன்குளம் பகுதியைச் சேர்ந்த, 15 வயது மாணவர், கொங்கராயக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த மாதம் அவரது தந்தை இறந்ததால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.

இதனால் அந்த மாணவரை கண்டித்த, சமூக அறிவியல் ஆசிரியை ஜேசுரதி, கம்பால் அவரது முதுகு மற்றும் கையில் பலமாக தாக்கியுள்ளார். காயமடைந்த மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மாணவர் புகாரின்படி ஜேசுரதி மீது, ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us