/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஒருவழிப்பாதையில் வந்த வேன் மோதி ஆசிரியர் பலி
/
ஒருவழிப்பாதையில் வந்த வேன் மோதி ஆசிரியர் பலி
ADDED : ஏப் 17, 2025 01:45 AM

கோவில்பட்டி:ஒருவழிப்பாதையில் வந்த தனியார் பள்ளி வேன் மோதி அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த சீனிவாசன், 55, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மாதாங்கோவில் சாலையில் அவர் சென்ற போது, எதிரே ஒருவழிப்பாதையில் வந்த கோவில்பட்டி, காமராஜர் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளி வேன், பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஆசிரியர் சீனிவாசன் தலை நசுங்கி உயிரிழந்தார்.
கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர். உயிரிழந்த சீனிவாசனுக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். கே.புதுப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியையாக வீரலட்சுமி பணியாற்றி வருகிறார்.