/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டாக்டர் மீது தாக்குதல் உறவினர் ஆத்திரம்
/
டாக்டர் மீது தாக்குதல் உறவினர் ஆத்திரம்
ADDED : நவ 07, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி, அண்ணாநகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் உமா தங்கம், 27, தனியார் மருத்துவமனை டாக்டர். இவரது கணவரான வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், உமா தங்கம் வசித்து வரும் வீட்டில், தங்களுக்கும் பங்கு உள்ளதாக கூறி செந்தில் ஆறுமுகத்தின் சகோதரியான சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுந்தரி, 36 மற்றும் அவரது கணவர் மணிகண்டன், 43, ஆகியோர் தகராறு செய்தனர். மேலும், அவரை தாக்கியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். புகாரின்படி, தென்பாகம் காவல் நிலைய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.