/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டி நகராட்சி ஆபிசை பொதுமக்கள் முற்றுகை
/
கோவில்பட்டி நகராட்சி ஆபிசை பொதுமக்கள் முற்றுகை
ADDED : அக் 09, 2011 02:31 AM
கோவில்பட்டி:கோவில்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி ஆபிசை
பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கோவில்பட்டி நகராட்சியில் சுமார் 23 நாட்களாக
பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லையென கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கோவி ல்பட்டி 3வது வார்டு பொதுமக்கள், சிபிஐ
வேட்பாளர் செந்தில்ஆறுமுகம் தலைமையில் கோவில்பட்டி நகராட்சி ஆபிசிற்கு
திரண்டு வந்து முற்றுகையிட்டனர். ஆனால் கோவில்பட்டி நகராட்சியில்
வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிக்கு கமிஷ்னர் மூர்த்தி
உட்பட அதிகாரிகள் சென்று விட்டதால், பொறியார் சுப்புலட்சுமியிடம்
பொதுமக்கள் குடிநீர் பிரச்னை குறித்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி நகராட்சி 16வது வார்டு பகுதி பொதுமக்கள் காலி
குடங்களுடனும், விநியோகம் செய்யப்பட்ட கலங்கான குடிநீரை அடை த்த
பாட்டில்களுடனும் திரண்டு வந்தனர். கடந்த 23 நாட்களாக குடிநீர் விநியோகம்
செய்யப்படாததால் பெரும் சிரமத்திற்கு உள் ளாகி இருப்பதாகவும், எப்போதாவது
வருகின்ற குடிநீரும் பயன்படுத்த முடியாத அள விற்கு கலங்கலாக வருவதாகவும்,
சீவலப்பேரியில் இருந்து குடிநீர் கிடைக்காத நிலையில் லாரிகள் மூலம்
குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென்றும் இருபகுதியில் இருந்த வந்த
பொதுமக்கள் தரப்பில் கூறினர். இதையடுத்து மின்தடை, பகிர்மான குழாய் பழுது
போன்ற காரணங்களால் குறைவான குடிநீரே கிடைப்பதால், கிடைப்பø த பகிர்ந்து
அளித்து வருவதாகவும், விரைவி ல் நிலைமை சரி செய்யப்படும் என்றும்
தெரிவித்ததையடுத்து திரும்பிச் சென்றனர்.
பொதுமக்கள் முற்றுகையின் போது 16வது வார்டு அதிமுக வேட்பாளர் ராமர், திமுக
வேட்பாளர் ராஜகுரு, 21வது வார்டு சிபிஐ வேட்பாளர் செல்லையா உள்பட பலர்
இருந்தனர்.

