/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
புதூர் பள்ளியில் சுதந்திர தினவிழா
/
புதூர் பள்ளியில் சுதந்திர தினவிழா
ADDED : செப் 01, 2011 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதூர் : புதூர் மகாத்மா நர்சரி தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது.
விழாவிற்கு முதல்வர் லட்சுமி அம்மாள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ரேவதி வரவேற்றார். புதூர் பஞ்., தலைவர் ஜெயவேல் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து எம்.எஸ்.பல்கலைக்கழக பேராசிரியர் துரைக்கண்ணன் முன்னிலையில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியை கலாவதி நன்றி கூறினார். பள்ளியின் மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.