/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சாத்தை., தூய இருதய பள்ளி மாணவர்கள் சாதனை
/
சாத்தை., தூய இருதய பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : செப் 01, 2011 11:53 PM
தூத்துக்குடி : மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் தூய இருதய பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
தூத்துக்குடி கல்வி மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் விளையாட்டுக் கழகம், நாசரேத் மண்டல சுதந்திர தின விளையாட்டுப் போட்டி பண்டாரஞ்செட்டிவிளை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மண்டல விளையாட்டுப் போட்டிகளில் சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 19 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் சுவின்டன் டோனிராஜா முதல் இடத்தையும், மாடசாமி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். 14 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் ஆல்வின் ஜோஸ் மூன்றாம் இடத்தை பெற்றார். 19 வயது பிரிவில் வட்டு எறியும் போட்டியில் சுவின்டன் டோனிராஜா முதல் இடத்தை பெற்றுள்ளார். 17 வயது பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுரேஷ் முதலிடத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி எட்வர்ட், பள்ளி தலைமையாசிரியர் தேவராஜ், உடற்கல்வி ஆசிரியர் அந்தோணி ஜோசப்ராஜ் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியின் பழைய மாணவர்கள் பாராட்டினர்.