/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
/
எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2011 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எட்டயபுரம்:எட்டயபுரத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில்
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். திருமண
நிதியை ரூ.25 ஆயிரமாக உயர்த்தவும், ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்தவும், இயற்கை
மரணம் ரூ.2 லட்சம், விபத்து மரணம் ரூ.5 லட்சமாக உயர்த்த வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் முனியசாமி, கிளை
செயலாளர்கள் முருகேஷ், வண்டிமலையான் சுதாகர், நாகராஜ் மற்றும் பலர் கலந்து
கொண்டனர். இளசைமணியன் நன்றி கூறினார்.