/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கொலை குற்றவாளிகள் இருவருக்கு மாவுக்கட்டு
/
கொலை குற்றவாளிகள் இருவருக்கு மாவுக்கட்டு
ADDED : செப் 23, 2024 02:29 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி, மறவன்மடத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி முருகன், 34, நேற்று முன்தினம் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மனைவி மற்றும் நண்பர்களுடன் நின்ற போது, ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.
புதுக்கோட்டை போலீசார் விசாரித்தனர். கொலை தொடர்பாக ராஜகோபால் நகரைச் சேர்ந்த மாரிதங்கம், 24, மாதேஸ்வரன், 24, வினீத், 24, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாரிதங்கமும், மாதேஸ்வரனும் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றதில், மாரிதங்கத்திற்கு வலது கையிலும், மாதேஸ்வரனுக்கு வலது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
வினீத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். மாரிதங்கம், மாதேஸ்வரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு முருகன், மாரிதங்கத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் இருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.