ADDED : ஜூன் 05, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:திருநெல்வேலி மாவட்டம், பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா, 50, இவர், தன் மனைவி கருத்தம்மாளுடன் துாத்துக்குடி எம்.ஜி.ஆர்., பூங்கா அருகே பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்.
அதே பகுதியில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தங்கமாரியப்பன் என்பவரும் தங்கியிருந்தார்.
இருவருக்கும் நேற்று ஏற்பட்ட தகராறில், முத்துராஜாவை அடித்துக் கொன்றார். தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தங்கமாரியப்பனை தேடி வருகின்றனர்.