/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வீடு முன் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியிடம் விசாரணை
/
வீடு முன் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியிடம் விசாரணை
வீடு முன் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியிடம் விசாரணை
வீடு முன் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியிடம் விசாரணை
ADDED : ஏப் 03, 2025 01:52 AM

துாத்துக்குடி:மலைவேம்பு செடி என நினைத்து வீட்டில் 8 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துாத்துக்குடி நகரின் மையப் பகுதியான ஆவுடையார்புரத்தில் அன்புராஜ், 45, கூலி தொழிலாளி, குடும்பத் தோடு வசிக்கிறார். அவரது வீட்டின் முன்புறம் பல மூலிகை செடிகள் வளர்கின்றன. அதில், 8 அடி உயரத்திற்கு கஞ்சா செடி இருப்பதை சிலர் நேற்று பார்த்து மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் நேரில் ஆய்வு செய்தபோது, மூலிகை செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடி இருப்பது தெரிந்தது. அந்த செடியை போலீசார் வேரோடு பிடுங்கி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக அன்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தனர். மலைவேம்பு செடி என நினைத்து வளர்த்து வந்ததாக போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் கூறினர். அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார் கஞ்சா செடி எப்படி அங்கு வந்தது என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

